தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க முடியாது! டி.கே சிவகுமார் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு முன்பு  நடைபெற்ற காவேரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5000 கனஅடி வீதம் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

அதன் அடிப்படையில் வினாடிக்கு 5000 கனஅடி வீதம் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 2:30 மணி முதல் காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்பு பேசிய கர்நாடக மாநில நீர்வளத்துறை  அமைச்சர் டி.கே சிவகுமார் அணைகளில் இருந்த தமிழகத்திற்கு தேவையான நீர் முழுவதுமாக திறக்கப்பட்டு விட்டது. 

தற்போது கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு திறக்க தண்ணீர் இல்லை. தற்போது உள்ள தண்ணீர் கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை புறந்தள்ளிவிட்டு தமிழக விவசாயிகளுக்காக தண்ணீர் திறக்க முடியாது எனது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதைத்தான் எங்களின் நிலைப்பாடாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முன் வைப்போம். வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை ஆணையமே கர்நாடகாவுக்கு நேரில் வந்து பார்த்துக் கொள்ளட்டும். தற்போது தமிழகத்திற்கு திறக்க தண்ணீர் இல்லை என்ற விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதில் அரசியல் ஏதும் கிடையாது மீண்டும் மழை வந்தால் நிச்சயம் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்போம். இனி தமிழகத்திற்கு கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DKSivakumar said that Tamil Nadu can no longer open water


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->