காதலிக்கு துரோகம் செய்த காதலன்.. காதலனுக்கு சரியான தண்டனை கொடுத்த தந்தை.!
different love story in kerala
கேரள மாநிலத்தில் திருநக்கரை என்ற பகுதியைச் சேர்ந்த ஷாஜியின் மகன் 12ம் வகுப்பு படித்த பொழுது, ஒரு மாணவியின் மீது காதல் வயப்பட்டு இருக்கின்றார். இவரும் வீட்டைவிட்டு வெளியேறியதால் இருவரின் பெற்றோரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காதலர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த காவல்துறையினர் அழைத்து வந்து இருவரையும் விசாரித்தனர்.
அப்போது அந்த பெண்ணின் பெற்றோர், வீட்டைவிட்டு வெளியேறி எங்களை பெண் அவமானப்படுத்திவிட்டாள். எங்களுக்கு இவர் வேண்டாம் என எழுதிக்கொடுத்துவிட்டு சென்று இருக்கின்றனர். தங்கள் மகன் செய்தது தவறு தான். ஆனாலும் அந்த பெண்ணிற்கு இவ்வளவு பெரிய தண்டனையா..?என அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், ஷாஜி, அந்த பெண்ணை தானே வளர்த்து திருமண வயதுக்கு பின்னர் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்து அழைத்து வந்துள்ளார். வளைகுடா நாட்டில் அவர் வேலை செய்து வந்துள்ளார். ஷாஜி தன்னுடைய மகனையும் அங்கே அழைத்து கொண்டு இருக்கின்றார். இந்த நிலையில் ஷாஜியின் மகனுக்கு வேறு ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்த ஷாஜி, மகனுடனான தன்னுடைய உறவை முழுமையாக முறித்துக்கொண்டு மருமகளாக இருந்த பெண்ணை தனக்கு மகளாக ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்து, வாரிசாக தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் அந்த பெண்ணுக்கே சேரும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளார். ஷாஜியின் இந்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
English Summary
different love story in kerala