டெல்லி : தனியார் பள்ளிகளில் 2023-24 ஆண்டுக்கான சேர்க்கை பதிவு இன்றுடன் நிறைவு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் இந்தமாதம் ஒன்றாம் தேதி முதல் 2023-24 கல்வியாண்டுக்கான சேர்க்கை பதிவு செயல்முறை தொடங்கப்பட்ட நிலையில், இந்த சேர்க்கை பதிவு இன்றுடன் முடிவடைகிறது. 

பள்ளியில், நர்சரி சேர்க்கை படிவத்தை நிரப்ப குழந்தைக்கு நான்கு வயதாகவும், மழலையர் பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு ஐந்து ஆகவும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி அரசின் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், முதலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்கள் மற்றும் காத்திருப்புப் பட்டியல் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வெளியிடப்படும். இதையடுத்து, நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் பிப்ரவரி 6ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த சேர்க்கை அட்டவணையிலிருந்து எந்த விலகலும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு பள்ளியும் இந்த சேர்க்கை அட்டவணையை அறிவிப்பு பலகை மற்றும் பள்ளியின் இணையதளத்தில் வெளியிடவேண்டும்.

அதேபோல், ஒவ்வொரு பள்ளியும் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வரை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் சேர்க்கை பதிவுக் கட்டணமாக ரூ.25 மட்டுமே வசூல் செய்ய வேண்டும். மேலும், அனைத்து தனியார் பள்ளிகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

delhi private school 2023 24 admissions today finish


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->