காதலனை குத்தி கொன்ற லிவ்-இன்-டுகெதர் காதலி! காரணத்தை கேட்டு அதிர்ந்த டெல்லி!
Delhi Lover murder case
மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு, இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை நடத்திய நபர், அந்த இளம்பெண்ணாலயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
குருகிராமில் வசித்து வந்த ஹரீஷ் (வயது 42), திருமணமானவர். அவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையே, 27 வயது இளம்பெண்ணுடன் பழகிய ஹரீஷ், கடந்த ஒரு வருடமாக டெல்லி அசோக் விஹாரில் அந்த பெண்ணுடன் ஒரு வீட்டில் லிவ்-இன் முறையில் வசித்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்யாமல் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், ஹரீஷ் அவ்வப்போது மனைவி மற்றும் குழந்தைகளை சந்திக்கச் செல்வது அந்த இளம்பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவருக்கிடையே இடையிடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவம் நடந்த நேற்று ஏற்பட்ட சண்டையில், அந்த இளம்பெண் கத்தியால் ஹரீஷை சரமாரியாக குத்தினார். இதில் காயமடைந்த ஹரீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.