இந்து மதம் குறித்து அவதூறு பதிவு: சவுதியில் இருந்து வந்த இளைஞர் கோழிக்கோடு விமான நிலையத்தில் கைது...!
Defamatory post about Hinduism Youth from Saudi Arabia arrested at Kozhikode airport
கர்நாடக மாநிலம் மங்களூரு உல்லால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் அப்துல் காதர் நிகத், கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், சவுதியில் இருந்தபடியே தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், அப்துல் காதர் நேற்று சவுதி அரேபியாவிலிருந்து கேரளாவுக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக செயல்பட்ட மங்களூரு போலீசார், இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில் கோழிக்கோடு விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய அதிகாரிகள், அப்துல் காதரை கைது செய்தனர்.
பின்னர் அவரை மங்களூரு அழைத்துச் சென்ற போலீசார், சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.
English Summary
Defamatory post about Hinduism Youth from Saudi Arabia arrested at Kozhikode airport