மாறுவேடத்தில் மாமியாரைத் தாக்கிய மருமகள் கைது - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மாறுவேடத்தில் மாமியாரைத் தாக்கிய மருமகள் - நடந்தது என்ன?

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டம் பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வாஸந்தி. இவர் பக்கத்து வீட்டில் இருந்து பால் வாங்கிக் கொண்டு வந்த போது முகமூடி மற்றும் கோட் அணிந்த படி வந்த மர்மநபர் ஒருவர் இரும்புக் கம்பியால் வாஸந்தியின் தலையில் அடிக்க முயன்றுள்ளார்.

இதைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட வாஸந்தி கையில் இருந்த பால் பாத்திரத்தை தலைமேல் வைத்து அடிபடாமல் தடுத்துள்ளார். இருப்பினும் அந்த மர்மநபர் வாஸந்தியை விடாது துரத்தி அவரது காலில் ஓங்கி அடிதுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வாஸந்தி கதறி அழுதுள்ளார். 

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வாஸந்தியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது தான் இளம்பெண் ஒருவர் முகமூடி, கோட் அணிந்து ஆண் போல் மாறுவேடத்தில் வந்து வாஸந்தியைத் தாக்குவது தெரிய வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சோதியடைந்த போலீசார் அந்த இளம்பெண் யார் என்று விசாரணை செய்தபோது அந்தப் பெண் வாஸந்தியின் இரண்டாவது மருமகள் சுகன்யா என்றுத் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணைக் கைது செய்து விசாரித்தபோது, “என் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடிப்பார். அதற்கு என் மாமியார் உடந்தையாக இருந்ததால் அவரைப் பழி வாங்க இப்படிச் செய்தேன்.”என்று வாக்குமூலம் அளித்துள்ளார். மருமகளே மாமியரைத் தாக்கிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

daughter in law attack mother in law in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->