நாடக காதலால் கற்பமான தலித் பெண்.! சின்னாபின்னமாக்கிய குடும்பத்தால், சீரழிந்து பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்து கொள்வதாக, தலித் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கி கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது .

உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது தலித் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை ஏமாற்றி குழந்தை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண், கடந்த ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால், அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த வாலிபரின் குடும்பத்தினர் தலித் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொடுமைப் படுத்தி இருக்கின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தலித் பெண் ஜூலை 7ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.

இதுகுறித்து தகவலறிந்து, விரைந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அந்தப் பெண் ஒரு கடிதத்தை விட்டுச் சென்றுள்ளார். அந்த கடிதத்தில், " தன்னை காதலிப்பதாக கூறி கருக்கலைப்பு செய்ய வைத்து இளைஞர் என்னை ஏமாற்றினார்.  இதனால், நான் அவர் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் வைத்தேன். எனவே, அவருடைய குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தினர். அந்த கொடுமை தாங்க முடியாமல் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dalit girl suicide to avoid harassment


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal