விமானத்தின் அலட்சியம் - மருத்துவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!
court order to rs ten lakhs compensation to doctor
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிபவர் கே.எஸ்.கிஷோர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் நடைபெற்ற மருத்துவ ஆலைசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றார்.
அங்கு அவர் ஓர்லாண்டோவில் இருந்து பிராங்க்பர்ட்டுக்கு விமானம் மூலம் சென்றார். இதையடுத்து, இவர் சென்ற ஜெர்மன் விமானம் பிராங்க்பர்ட்டு விமான நிலையத்திற்கு காலதாமதமாக வந்து சேர்ந்தது.

அதனால், அவருக்கு பெங்களூருக்குச் செல்லும் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அந்த விமான நிலையத்திலேயே காத்திருந்து பின்னர், மற்றொரு விமானத்தின் மூலம் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தார்.
அதன் பின்னர் அவர் சம்பவம் தொடர்பாக பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அவர் தெரிவித்துள்ளதாவது, "ஜெர்மன் விமானத்தின் அலட்சியத்தால் பெங்களூருவுக்கு புறப்பட இருந்த விமானத்தை தவறவிட்டேன்.

அது தொடர்பாக விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை" என்றுத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ஜெர்மன் நாட்டு விமான நிறுவனத்தின் அலட்சியத்தால் தான், மருத்துவரால் பெங்களூரு விமானத்தை பிடிக்க முடியவில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆகவே, அந்த விமான நிறுவனம் சார்பில் மருத்துவர் கிஷோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
English Summary
court order to rs ten lakhs compensation to doctor