தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட ஆந்திரா கவுன்சிலர் - நடந்தது என்ன?
counsilor mulaparthi ramaraju slaps himself with slipper
தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட ஆந்திரா கவுன்சிலர் - நடந்தது என்ன?
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி மாவட்டம் நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெயற்ற கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
இதற்காக அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இதனால் ராமராஜு, தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என்று வருத்தம் அடைந்தார்.

இந்த நிலையில், நேற்று நர்சிபட்டினம் நகராட்சியில் நகரசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராமராஜு திடீரென எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று ஆதங்கத்தை தெரிவித்த அவர், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் அழுதபடியே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். தேர்தலின் பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர், தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
counsilor mulaparthi ramaraju slaps himself with slipper