ஜனவரி 03-இல் ஜெய் பீம்,ஜெய் சம்விதான் பாதயாத்திரை பிரசாரத்தை தொடங்கப்படும்; காங்கிரஸ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 27-ந் தேதி காங்கிரஸ் கட்சி தொடங்குவதாக இருந்த  ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் அபியன் பிரசாரத்தை ஜனவரி 03-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக்குள், மாவட்டங்கள், மாநிலங்கள் என அனைத்து இடங்களிலும் 
குறித்த பிரசாரம் தொடங்கப்படவுள்ளது. முன்னாள் பிரகாங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டிசம்பர் மாதம் 26-ந்தேதி காலமானார். அதனால், அக்கட்சி ஏழு நாட்கள் துக்கம் அனுசரித்து,  பிரசாரததை ஒத்தி வைத்திருந்தது.

பெலகாவியில் (பெல்காம்) நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் இந்த பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு பற்றி முடிவு செய்யப்பட்டது.

03 தேதி தொடங்கும் இந்த பிரசாரம், இறுதியாக ஜனவரி 26-ந்தேதி மோவில் (Mhow) பொதுக்கூட்டமாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு உருவாக்கப்பட்டு, அரசியலமைப்பு  உருவாக்கப்பட்ட 75-வது வருடத்தை கொண்டாடும் வகையில் டாக்டர் அம்பேத்கரின் ஜென்மபூமி மோவில் குறித்த பொதுக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. 

மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாத்து, மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த இயக்கம் ஜனவரி 26-ம் தேதிக்கு பிறகும் இந்த பிரசாரத்தை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஜனவரி 26-ந்தேதி முதல் 2026 ஜனவரி 26-ந்தேதி வரை காங்கிரஸ் மிகப்பெரிய பாதயாத்திரை பிரசாரத்தை தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதில் அனைத்து தலைவர்களும் பங்கேற்பார்கள். இந்த பாதயாத்திரை கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக ரிலே வடிவில் இருக்கும் என காங்கிரஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Announces Jai Bhim Jai Samvidhankrishna on January 03


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->