உ.பி: குளிர்சாதன கிடங்கின் கூரை இடிந்து விபத்து - 10 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் குளிர்சாதனை கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு குளிர்சாதன கிடங்கின் மேற்கூரை திடீரென நேற்று முற்றிலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், சம்பால் மாவட்டத்தில் உள்ள சந்தௌசியில் குளிர்பானக் கடை விபத்தில் உயிர் இழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். பகவான் ஸ்ரீ ராமர் அவர்களின் புனித பாதங்களில் இடம் பெறவும், குடும்ப உறுப்பினர்களுக்கு இதைத் தாங்கும் வலிமையையும் வழங்கட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பலத்த காயம்டைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து மொராதாபாத் கமிஷனர் மற்றும் டிஐஜி தலைமையிலான குழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Yogi Adityanath announced relief for 10 killed cool storage warehouse collapsed in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->