பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு!
Verdict in the Pollachi sexual case today
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளதால் கோவை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சி.பி.ஐ. நடத்திய விசாரணையை அடுத்து, இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் , வசந்தகுமார்,சதீஷ் , மணிவண்ணன் , திருநாவுக்கரசு, ஹேரேன் பால் , பாபு என்ற பைக் பாபு , அருளானந்தம் , அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கடந்த 28-ந் தேதி நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.அதன்படி இன்று தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கோவை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
English Summary
Verdict in the Pollachi sexual case today