போர் விமானம் வீசிய வெடிகுண்டு.. 20 பள்ளி மாணவர்கள் பலியான சோகம்!
The bomb dropped by the fighter jet the tragedy of 20 school students losing their lives
மியான்மர் நாட்டில் போர் விமானம் நடத்திய கொடூர தாக்குதலில் 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மர் நாட்டில் அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக 4ஆண்டுகளாக ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றன. இப்படி நடைபெறும் சண்டையில் இதுவரை 6,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய மியான்மரின் தபாயின் நகரத்தில் உள்ள கிராமத்தின் மீது நேற்று ராணுவத்தினர் விமானங்களில் இருந்து பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு இருந்த பள்ளிக்கூடம் மீது ஒரு போர் விமானம் வீசிய வெடிகுண்டு விழுந்து வெடித்ததில் 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போராட்டக்காரர்கள் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த கொடூர தாக்குதலில் இந்த சம்பவத்தில் அருகிலுள்ள 3 வீடுகள் சேதமடைந்தன. இந்த வான்வழித் தாக்குதல் குறித்த தகவல்களை ராணுவ அரசாங்கமோ, ஊடகங்களோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
English Summary
The bomb dropped by the fighter jet the tragedy of 20 school students losing their lives