சீனாவில் புதிய கல்வி அத்தியாயம்! - ஷாங்காய் பள்ளிகளில் முதல் முறையாக ‘இந்தி’ பாடம் அறிமுகம்!
new chapter in education in China Hindi subject introduced first time Shanghai schools
சீனாவில் இந்திய மாணவர்கள் கல்வி கனவுகளை நிறைவேற்ற புறப்படும் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் நிலையில், அந்நாட்டில் ஒரு புதிய கல்வி வரலாறு எழுதப்பட்டுள்ளது.ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, மருத்துவப் படிப்புக்காக (MBBS) இந்திய மாணவர்கள் அதிக அளவில் சீனாவை தேர்வு செய்து வருகின்றனர்.

இதனுடன், சீனாவின் பல்கலைக்கழகங்களிலும் பள்ளிகளிலும் இந்திய மொழி மற்றும் கலாசாரத்தின் மீதான ஆர்வமும் பெருகி வருகிறது.இதற்காக, சீனாவின் சில பள்ளிகளில் “இந்தி” மொழி ஒரு அதிகாரப்பூர்வ பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது என்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் தொடக்கமாக, ஷாங்காய் நகரில் உள்ள பிரிட்டானிகா சர்வதேச மேல்நிலைப்பள்ளியில் இந்தி பாடம் முதன்முறையாக கற்பிக்கப்பட உள்ளது.இதற்காக, இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத் மற்றும் தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர், இந்தி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பவ்யா மேத்தாவை சிறப்பு விழாவில் கௌரவித்தனர்.
பவ்யா மேத்தா, இந்தியாவின் வீரத்திற்குப் பெயர் பெற்ற கீர்த்தி சக்ரா விருது பெற்ற பிரிகேடியர் ரவி தத் மேத்தாவின் மகள்,இந்த முக்கிய பணி மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான கலாசாரப் பாலமாக திகழ உள்ளார்.இந்தி பாடம் சீன மாணவர்களின் பாடத்திட்டத்தில் இணைக்கப்படுவது, இந்தியா–சீனா உறவில் ஒரு புதிய கல்வி அத்தியாயத்தைத் திறந்துள்ளது என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
English Summary
new chapter in education in China Hindi subject introduced first time Shanghai schools