மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை!
Sexual harassment of students 30 years imprisonment for the teacher
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கலிபோர்னியா மாகாண கோர்ட் தீர்ப்பு அளித்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியோகோ மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தா 36 வயதான ஜாக்குலின் மா தனது வகுப்பில் பயிலும் 12 வயது மாணவரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வகுப்புகள் முடிந்த பின்பு கூடைப்பந்து பயிற்சி என கூறி மாணவர் பள்ளியிலேயே ஆசிரியையுடன் அதிக நேரம் செலவழித்துள்ளாா். ஒருநாள் மாணவரின் இந்த நடவடிக்கை பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த அவரது செல்போனை பார்த்தபோதுதான் அதில் ஆசிரியை ஜாக்குலின் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கடந்த 2023-ம் ஆண்டு ஜாக்குலினை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கலிபோர்னியா மாகாண கோர்ட்டில் நடைபெற்று வந்தநிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்து ஜாக்குலின் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.ஆசிரியை ஜாக்குலின் அந்த ஆண்டின் சிறந்த ஆசிரியை என்ற விருதைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sexual harassment of students 30 years imprisonment for the teacher