"சோழ சாம்ராஜ்ய செங்கோல்" இந்தியாவின் சுதந்திர அடையாளமாக மாறியது எப்படி?!
Chola Sengol India freedom
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

அப்போது தமிழகத்தில் இருந்து 20 ஆதீனங்களை சேர்ந்த குழு ஒன்று சோழ சாம்ராஜ்ய செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி இடம் ஒப்படைக்க உள்ளனர். தொடர்ந்து சோழ சாம்ராஜ்ய செங்கோல் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படும் எனவும் அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
சோழ சாம்ராஜ்ய செங்கோல் இந்தியாவின் சுதந்திர அடையாளமாக மாறியது எப்படி?!

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மவுண்ட் பேட்டன், பிரதமர் நேருவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஆகியது.

ஆனால் அதனை எப்படி செய்வது என்று யாருக்கும் தெரியாமல் இருந்ததால், பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன. அப்போது பிரதமர் நேருவுக்கு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆலோசனை ஒன்றை வழங்கினார்.

அந்த ஆலோசனையின் படி சோழ சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தின் அடையாளமாக விளங்கிய செங்கோலை ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அதற்கேற்றப்படியே தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு ஆதினங்கள் செங்கோலை எடுத்துச் சென்று, டெல்லியிலே மவுண்ட்பேட்டன் அதை பிரதமர் நேருவின் கையில் ஒப்படைக்கும்படி ஏற்பாடுகளை செய்தனர்.

1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது, இந்த சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல்தான் இந்தியாவின் சுதந்திரத்திற்கு அடையாளமாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், தமிழ் பாரம்பரியமிக்க சோழ சாம்ராஜ்யத்தின் அந்த செங்கோலை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை பிரதமர் நரேந்திர மோடி இடம் ஒப்படைப்பதற்காக தமிழகத்தில் இருந்து 20 ஆதீனங்கள் டெல்லி பயணம் செய்ய உள்ளார்கள். திறப்பு விழா நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி இடம் இந்த செங்கோலை ஆதீனங்கள் முறைப்படி ஒப்படைப்பார்கள். அதன்பிறகு அது புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்படும்.
செய்தி சுருக்கம் :
* நாடு சுதந்திரம் அடைந்த போது நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல்.
* 8ஆம் நூற்றாண்டில் சோழ ஆட்சிக்காலத்தில் உருவான செங்கோல் பயன்படுத்தும் மரபு
* நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் நிறுவப்பட உள்ளது
English Summary
Chola Sengol India freedom