இந்தி மொழி கட்டாயம்.? ஆண்டிற்கு 2 முறை பொதுத் தேர்வு.!! 11,12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி.!!
CentralGovt announced 11th 12th exam will be held twice a year
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் 2 முறை பொது தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் 2 முறை பொது தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதற்கு ஏற்ப பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க மத்திய அரசின் கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இரு முறை நடத்தப்படும் பொது தேர்வில் எந்த தேர்வில் மாணவர்கள் அதிகம் மதிப்பெண் எடுக்கிறார்களோ அதையே பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறன் மதிப்பீடு மற்றும் புரிதலின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இந்த தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு நேரம் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரு மொழிகளில் படிக்க வேண்டும் என்றும், அதில் இந்தி மொழியும் இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது 2024-2025 கல்வியாண்டில் நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
CentralGovt announced 11th 12th exam will be held twice a year