மணிப்பூர் கலவரம் - 93.5 சதவீத குழந்தைகள் பள்ளிகளில் இலவசமாக சேர்ப்பு - மத்திய அமைச்சர் தகவல்.!
central minister info 93 percent student enrolled in schools for free
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலளித்ததாவது:-
"மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக 14 ஆயிரத்து 763 பள்ளி குழந்தைகள், வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு நிவாரண முகாமிலும் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

அதன் படி, 93.5 சதவீத குழந்தைகள், அருகில் உள்ள பள்ளிகளில் இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளனர். கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
கடந்த 2018-2019 கல்வி ஆண்டில் இருந்து 2022-2023 கல்வி ஆண்டு வரை பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினரை சேர்ந்த 2 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக, மத்தியபிரதேசத்தில் 53 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
English Summary
central minister info 93 percent student enrolled in schools for free