காவிரி நீர் விவகாரம் || காவிரி ஆணையம் கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீர் பங்கேற்றினை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் காவேரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இன்று மாலை மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துணைமுருகன் தலைமையிலான தமிழக எம்பிக்கள் குழுவினர் சந்திக்க உள்ள நிலையில் காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக அரசு சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கடமை எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அரசு வினாடிக்கு 3000 கன அடி நீர் மட்டுமே திறந்து விட முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தது. 

இருதரப்ப கருத்துகளையும் கேட்ட காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீ வீதம் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து அவசர ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சமர்ப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cauvery Authority orders KAgovt to release 5000 CFS water to TamilNadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->