T20 வெற்றிக் கொண்டாட்டம் : 11.5 டன் குப்பைகள்.. விடிய, விடிய சுத்தம் செய்த தூய்மைப் பணியாளர்கள்..!! - Seithipunal
Seithipunal



T 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி T 20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை இந்திய அணியினர் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். இதையடுத்து உலகக் கோப்பையோடு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணியினர், தொடர்ந்து மும்பையில் நடந்த வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதனிடையே மும்பை மரைன் டிரைவில் இருந்து வான்கடே மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் சென்ற இந்திய அணியினர், வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே மரைன் டிரைவில் குவிந்த ரசிகர்களால் அந்த பகுதியில் சுமார் 11.500 டன் குப்பைகள் சேர்ந்ததாகத் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து இந்த குப்பைகளை அகற்றும் பணியில் இரவு 11.30 மணி முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் மும்பை மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த தூய்மைப் பணி அடுத்த நாள் காலை 8 மணி வரை தொடர்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மரைன் டிரைவ் பகுதி முழுக்க பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர், துணி, ஷூ, பிளாஸ்டிக் பாட்டில், செருப்புகள் என்று பல விதமான குப்பைகள் கிடைத்துள்ளன. மேலும் இங்கு சேகரிக்கப்பட்ட குப்பபைகளை மறு சுழற்சிக்கு அனுப்பவுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓவர் நைட்டில் 11.500 டன் குப்பைகளை அப்புறப்படுத்திய மும்பை மாநகராட்சிப் பணியாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BMc Collects 11.5 Kg Waste From Mumbai Marine Drive After T20 Victory Parade


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->