தெலுங்கானாவில் தலித் விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்.! தீவிர விசாரணையில் போலீசார்.!
attack on dalit farmer in telungana
தெலுங்கானாவில் தலித் விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்.! தீவிர விசாரணையில் போலீசார்.!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள, மஞ்சேரியல் மாவட்டம் ஷெட்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கம் பாபு. இவர் ஒரு தலித் விவசாயி. இந்த நிலையில், நேற்று முன்தினம் துர்கம் பாபுவின் வீட்டுக்குள் புகுந்த ஒருவர், சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் "உயர் சாதியினரின் நெல் வயல்களில் மாடுகள் மேய்ந்ததால் துர்கம் பாபுவுக்கு தண்டனை கொடுக்கும் வகையில், ராமிரெட்டி என்பவர் கட்டி வைத்து தாக்கியது தெரிய வந்தது.

இந்த சம்பவ குறித்து தகவலறிந்த மனித உரிமை அமைப்புகள் மற்றும் தலித் அமைப்புகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் ராமிரெட்டி மீது எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக துர்கம் பாபு தெரிவித்ததாவது, "உள்ளூரைச் சேர்ந்த சிலர் என்னைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், ராமிரெட்டி அவர்களைத் திட்டினார். இரக்கமில்லாமல் என்னைத் தாக்கியதுடன் சாதி ரீதியாகவும் ஆபாசமாக பேசினார்" என்றுத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் தலித் விவசாயிக்கு எதிராக நடைபெற்ற இந்த வன்கொடுமைச் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
attack on dalit farmer in telungana