ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் அம்படோலா அருகே சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் இன்று (சனிக்கிழமை) தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இநாத ரயில் சிறப்பு வழித்தடத்தில் அம்படோலாவில் இருந்து லாஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்குகளை எடுத்து சென்று கொண்டிருந்த போது நான்கு பெட்டிகள் தண்டவாளத்தில் இறங்கியதாக தெரிகிறது. இந்த விபத்தில், உயிர் சேதமோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. 

சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் மற்ற ரயில் சேவைகளும் பாதிக்கப்படவில்லை என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாலசோர் மாவட்டத்தில் நடந்த மூன்று ரயில் விபத்தில் குறைந்தது 292 பேர் உயிரிழந்த நிலையில் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another goods train accident in Odisha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->