சிசேரியனில் முதலிடம் பிடித்தம் மாநிலம்! முதலான்ச்சர் பெருமிதம்!
Andhra Baby birth with operation CM proud
ஆந்திர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரில் குழந்தை பேறு தொடர்பான விவாதம் நேற்று அமராவதியில் நடைபெற்றது.
இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவிக்கையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது மிகுந்த ஆபத்தை உருவாக்குகிறது. நாடு முழுவதும் பார்க்கையில், இத்தகைய சிசேரியன் பிரசவங்களில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது.
சில பெற்றோர் முகூர்த்த நேரத்துக்கேற்ப குழந்தை பிறக்கும் வகையில் அறுவை சிகிச்சை நேரத்தை திட்டமிடுகின்றனர். இது தவறான நடைமுறையாகும். பெற்றோரின் வசதிக்காக அல்லது மூடநம்பிக்கைகளுக்காக சிசேரியன் முறையை தேர்வு செய்வது தாயும் குழந்தையும் சுகாதார ரீதியாக ஆபத்தை சந்திக்கச் செய்யும்.
மருத்துவ ரீதியாக அவசியம் ஏற்பட்டால்தான் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேவையில்லாமல் சிசேரியன் செய்யும் பழக்கத்தை நிறுத்துவது மருத்துவர்களும் பெற்றோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய முக்கிய பொறுப்பு என அவர் வலியுறுத்தினார்.
English Summary
Andhra Baby birth with operation CM proud