சிஆர்பிஎப், ராணுவம், போலீஸ் இணைந்து செயல்பட அமித்ஷா உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சிஆர்பிஎப் மற்றும் ராணுவம் இணைந்து செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காஷ்மீர்ஆளுநர் மனோஜ் சின்ஹா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை இயக்குநர் தாபன் தேகா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சிஆர்பிஎப் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து செயல்பட வேண்டும். மாநில உளவுத்துறையை
வலுப்படுத்துவதுடன் ஊக்கப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AmitShah orders CRPF Army Police to work together in kashmir


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->