மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்றுக்கொண்டுள்ளார்..! - Seithipunal
Seithipunal


மும்பை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே  பதவியேற்று கொண்டுள்ளார்.அவருக்கு மராட்டிய கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மராட்டிய துணை முதல்-மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே மற்ற மற்றும் அஜித் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கு முன் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய், கடந்த 17-ஆம் தேதி பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, அலோக் ஆராதே பதவியேற்று கொண்டுள்ளார். 

இதேபோன்று, டெல்லி கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய், டெல்லி ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பதவியேற்று கொண்டுள்ளார். இதில், டெல்லியின் முதல்-மந்திரி அதிஷி, மூத்த அரசு அதிகாரிகள், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Alok Aradhe has taken oath as the Chief Justice of the Bombay High Court


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->