மீண்டும் கொலை மிரட்டல் - பலத்த பாதுகாப்பில் முகேஷ் அம்பானி.! - Seithipunal
Seithipunal


நாட்டின் மிகப்பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது,10 என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் உட்பட 55 பேர் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு மெயில் ஒன்று வந்தது. அந்த மெயிலில், "20 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகார் தொடர்பாக, அம்பானி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் கொலை மிரட்டல் தொடர்பாக இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு மேலும் ஒரு கொலை மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், எங்களின் முதல் மின்னஞ்சலுக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. அதனால் தற்போது தொகை ரூ.200 கோடியாக அதிகரித்துள்ளது. இப்போதும் பணம் தரவில்லை என்றால், மரணம் உறுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால், மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின் பேரில் அம்பானிக்கு உயரதிகாரிகளைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

again kill threat to mukesh ambani


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->