தெலுங்கானா வெள்ள பாதிப்பு - நடிகர் மகேஷ் பாபு நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றூக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் உயிரிழந்தனர். 

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது நடிகர் மகேஷ் பாபுவும் ரூ.60 லட்சம் நன்கொடை வழங்கி இருக்கிறார்.

அதாவது, நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரது மனைவி தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை, இன்று நேரில் சந்தித்து தெலுங்கானா வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்காக ரூ.50 லட்சத்திற்கான காசோலையும், ஏ.எம்.பி சினிமாஸ் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

நடிகர் மகேஷ் பாபு தற்போது பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் தற்காலிகமாக 'எஸ்.எஸ்.எம்.பி 29' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருவைத்து குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor mahesh babu compensation send to telangana floods affection


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->