போலி ஆவணங்கள் மூலம் 1,906 கழிப்பறைகள் கட்டியதாக கணக்கு: குஜராத்தில் நடந்துள்ள ரூ.2 கோடி மெகா ஊழல்..! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாகக் கூறி,குஜராத்தில் 1,906 கழிப்பறைகள் கட்டியதாக போலி ஆவணங்கள் மூலம் அரசுக் கருவூலத்திலிருந்து ரூ.2 கோடி மெகா ஊழல் நடந்துள்ளது.

குஜராத்தின் பரூச் மாவட்டத்தில், ஆனந்த் கடி கிராமோதியோக், நவ்சேத்னா விகாஸ், கம்தார் கல்யாண் மண்டல், மகாத்மா காந்தி கிராமநிர்மாண் மற்றும் வசுந்தரா சர்வஜனிக் ஆகிய அறக்கட்டளைகள் மூலம் 1,906 வீடுகளில் கழிப்பறைகளை கட்டியுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இங்கு கழிப்பறைகள் கட்டப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் அம்பலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இது தொடர்பில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பிரவீன் மோடி என்பவர் புகார் அளித்துள்ளார். 

அதாவது, அங்கலேஷ்வர் நகராட்சியில் திருமணச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் கழிப்பறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்தப்பட்டதாகத் கூறப்படுகிறது. மேலும், ஆனந்த் கடி கிராமோதியோக், நவ்சேத்னா விகாஸ், கம்தார் கல்யாண் மண்டல், மகாத்மா காந்தி கிராமநிர்மாண் மற்றும் வசுந்தரா சர்வஜனிக் ஆகிய அறக்கட்டளைகள் மூலம் சில அரசு அதிகாரிகளும் இந்த ஊழலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பிரவீன் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Rs 2 crore scam in Gujarat involving the construction of 1906 toilets using fake documents


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->