மும்பையில் பயங்கரம்: பொதுக்கழிப்பறை கட்டணம் வசூலிப்பதில் தகராறு - ஒருவர் கொலை - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது பொதுக்கழிப்பறை கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மத்திய மும்பையின் தாதர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு எதிரே பொது கழிப்பறை ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தின இரவு, ராகுல் பவார் என்பவர் பொது கழிவறையை பயன்படுத்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.

அப்பொழுது ராகுலை, காப்பாளர் விஸ்வஜீத் தடுத்து நிறுத்தி கழிப்பறை கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருடைய வாக்குவாதம் முக்கிய நிலையில், விஸ்வஜித் ராகுலை கத்தியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும் மற்றொருவர் அவரை மரக்கம்பியால் தலையில் தாக்கிய நிலையில், ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு விஸ்வஜித்தை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man was killed in a dispute over payment of public toilet fees in Mumbai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->