7 மாத குழந்தை வயிற்றில் 2 கிலோ எடையுள்ள கரு.. மருத்துவர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் 7 மாத குழந்தை வயிற்றில் 2 கிலோ எடையுள்ள கரு வளர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு விதமான குறைபாடுகள் மற்றும் வித்தியாசமான உடலமைப்புகளுடன் பிறக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக நாம் உண்ணும் உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.

அதன்படி, ஒரே குழந்தைக்கு இரட்டை தலை, 3 கைகள் மற்றும் விலங்குகளின் உடலமைப்பு போன்ற உடலமைப்புகளை கொண்டு பிறக்கிறது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு ஆரோக்கியமாக வளர்கிறது. ஆனால், சில குழந்தைகள் பிறந்தவுடன் அல்லது அறுவை சிகிச்சை செய்தவுடன் இறந்து விடுகிறது.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மருத்துவமனையில் 7 மாத ஆண் குழந்தை அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அந்த குழந்தையின் வயிறு நாளுக்கு நாள் பெரிதாக வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்து பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தையின் வயிற்றில் 2 கிலோ எடையுள்ள 6 மாத கரு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கருவை அகற்றி, 7 மாத ஆண் குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7month baby stomach 2kg weight in uttarpradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->