மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் கேஸ் இணைப்பு - மத்திய அரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் கேஸ் இணைப்பு - மத்திய அரசு தகவல்.!

டெல்லியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜி20 மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அனுராக் தாக்கூர், "ஜி20 மாநாட்டிற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. டெல்லி பிரகடனம் என்ற உக்ரைன் தொடர்பான கூட்டறிக்கை இந்தியாவின் பலத்தை நிரூபிப்பதாக உள்ளது. 

பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 75 லட்சம் காஸ் இணைப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

75 lakhs gas connection in india central government info


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->