செல்போன் வெடித்து முதியவர் பலி..   பயனாளர்களே உஷார்.!  - Seithipunal
Seithipunal


செல்போன்களின் பயன்பாடு இன்று நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. அவை நம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது என்றால் மிகையாகாது. போன் பேசுவதில் தொடங்கி இன்று மளிகை சாமான்கள் வாங்கும் வரை எல்லாவற்றிற்கும் மொபைல் போன்களின் தேவை அத்தியவசமாகிவிட்டது.

இத்தனை உபயோகமாக இருக்கும் செல்போன்களினால் ஏற்படும் ஆபத்துகளும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. என்னதான் மக்களுக்கு இவற்றைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் ஏற்படும் தவறுகளால் உயிரிழப்பில் சென்று முடிந்து விடுகின்றன. இதைப் போன்ற ஒரு சம்பவம் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்து சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினி மாவட்டத்தைச் சார்ந்த தயாராம் பரோட் என்ற 68 வயதான முதியவர் தான், செல்போன் வெடித்ததில் உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளிவந்திருக்கிறது.

தயாராம் பரோட் என்ற இந்த முதியவரை தேடி அவரது நண்பர்  சென்றபோது தயாராம் பரோட் உடல் சிதறி உயிரிழந்து கடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் காவல் துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். மேலும் அவரது செல்போனும் வெடித்து சிதறி கிடந்திருக்கிறது. காவல்துறையின் விசாரணையில் செல்போனின் பேட்டரி வெடித்ததால் தயாராம் பரோட் உயிரிழந்துள்ளதாக  தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

68 year old madhya pradesh man blasts into pieces after his mobile phone battery explodes


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->