உத்தரபிரதேசம்: அரசு மதுபான கடையில் மது அருந்திய 6 பலி..!
6 killed after drinking alcohol at Uttar Pradesh liquor store
மதுபான கடையில் மது அருந்திய ஆறு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள பஹார்பூர் கிராமத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற விசேஷ நிகழ்வில் பங்கேற்ற சிலர் அங்குள்ள மதுபான கடையில் மது அருந்தியுள்ளனர்.

இதனை அடுத்து, அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்ள் அருந்திய மதுபானத்தை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
6 killed after drinking alcohol at Uttar Pradesh liquor store