36 விமானப்படை வீரர்களுக்கு உயரிய விருது..! -மத்திய அரசு
36 Air Force personnel to receive top awards Central Government
மத்திய அரசு, வீரதீர விருதுகளை வழங்க, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற பைட்டர் பைலட்கள் உட்பட 36 விமானப்படை வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

அதில் ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக பணியாற்றிய 9 இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு நாட்டின் மிக உயர்ந்த 3வது வீரதீர பதக்கமான 'வீர் சக்ரா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீர் சக்ரா விருது பெறும் அதிகாரிகளில், ஸ்க்வாட்ரான் லீடர் சித்தாந்த் சிங், ஸ்க்வாட்ரான் லீடர் ரிஸ்வான் மாலிக்,குரூப் கேப்டன் அனிமேஷ் பட்னி, குரூப் கேப்டன் குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, குரூப் கேப்டன் ரஞ்சித் சிங் சித்து, குரூப் கேப்டன் மணீஷ் அரோரா, ஸ்க்வாட்ரான் லீடர் சர்தக் குமார் மற்றும் ஃப்ளைட் லெப்டினன்ட் அர்ஷ்வீர் சிங் தாக்கூர் ஆகியோர் இருக்கின்றனர்.
இதில் ஒருவருக்கு கீர்த்தி சக்ரா விருதும், மேலும் 26 பேருக்கு வாயு சேனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பயங்கரவாத ஒழிப்பிற்கு பங்களிப்பு தந்த இவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மையில் தாக்குதலின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி ''அமர்பிரீத் சிங்'' தெரிவித்திருந்தது.
English Summary
36 Air Force personnel to receive top awards Central Government