ஆயுர்வேத மருந்தகத்தில் கூடுதலாக 314 மருந்துகள் தயாரிக்க தேவஸ்தானம் முடிவு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தேவஸ்தானத்தின் ஆயுர்வேத மருந்தகம் திருப்பதி அருகில் உள்ள நரசிங்கபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தில் மருந்துகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இந்த மருந்தகத்தில் கூடுதலாக மருந்துகள் தயாரிப்பதற்கு போதிய இட வசதி இல்லாததால், கூடுதலாக கொட்டகைகள் அமைக்கும் பணிகளும், அதில் எந்திரங்கள் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

அதனை தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் தற்போது முப்பது வகையான மருந்துகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. 

அதனால், கூடுதலாக முந்நூற்று பதினான்கு வகையான மருந்துகளை தயாரிப்பதற்கு தேவஸ்தான மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மருந்துகளைத் தயாரிப்பதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெறப்பட்ட நிலையில், முந்நூற்று பதினான்கு மருந்துகளும் விரைவில் தயாரிக்கப்படும். 

அதற்காக கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அதில் மருந்துகள் தயாரிப்பதற்கு தேவையான அதிநவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. 
கொட்டைகள் அமைக்கும் பணிகள் முடிந்ததும், அவற்றில் முதல் கட்டமாக 10 வகையான மருந்துகள் தயாரிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

314 products prepare in ayurvedic pharmacy in tirupathi devasthanam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->