உஜ்ஜைனில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 25 பேர் காயம் - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்திலிருந்து பயணிகளுடன் பேருந்து ஒன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது உஜ்ஜைன் மாவட்டம் பூகி மாதா பைபாஸில் சென்றபோது, எதிர்பாராத விதமாக வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மஹாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்றவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில் சுமார் 35 பயணிகளுடன் பேருந்தை அவசர அவசரமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக மஹாகல் பகுதி நகரக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 injured in bus accident in Ujjain Madhya pradesh


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal