காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டிலிருந்து 24 வயது இளைஞர் சடலமாக மீட்பு.!! - Seithipunal
Seithipunal


பீகாரில் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு சொந்தமான பூர்வீக வீட்டிலிருந்து 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆதித்யா சிங்கின் பேரனும் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ நீத்து சிங்கின் மைத்தனர் மகனுமான கோலு குமார் சடலமாக மீட்கப்பட்ட பியூஸை இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அந்த இடத்தில் பியூஸுக்கும் கோலு குமாருக்கும் இடையே மது போதையில் சண்டை ஏற்பட்டதை அடுத்து அவரை ஒரு அறையில் வைத்து தாக்கியதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் நேற்று பியூஸ் சடலமாக காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பியூஸ் சடலமாக கிடந்தது காங்கிரஸ் எம்எல்ஏ நீத்து சிங்கின் மைத்துனர் சுமன் சிங்கிற்கு சொந்தமான வீடு என்பதும் அவர்கள் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் அந்த வீட்டில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 

இறந்து போன பியூஸ் கடைசியாக கோலு குமாருடன் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் தொடர்புடைய கோலு குமார் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பியூஸ் மீட்கப்பட்ட அறையில் இருந்து தடயங்கள் மற்றும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பியூஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அதன் அறிக்கை வந்த பிறகு அவர் எதனால் இறந்தார் என்ற முழு தகவல் தெரிய வரும் என பிகார் மாநில போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

24year old youth was found dead in Congress MLA house


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->