இளநீரை யாரெல்லாம் குடிக்க கூடாது என்று உங்களுக்கு தெரியுமா..?
இளநீரை யாரெல்லாம் குடிக்க கூடாது
இயற்கையின் வரப்பிரசாதமான இளநீரில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளது. இது வெப்பத்தை தணிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
இதுமட்டுமா பொட்டாசியம், சோடியம் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்ககூடியது இளநீர்.
அப்படிப்பட்ட இளநீரை யார் யார் அருந்த கூடாது என்று இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க..
இளநீர் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற பானமாக கருதப்படுகிறத. ஆனால் தடகள விளையாட்டு வீரர்களுக்கு இளநீர் ஏற்றதல்ல.

கார்போஹைட்ரேட் குறைந்த அளவிலும், பொட்டாசியம் அதிக அளவிலும் இருப்பதே இதற்கு காரணமாம்.
இளநீரில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.
எனவே சர்க்கரை நோயாளிகள் இளநீர் அருந்தாமல் இருப்பதே நல்லது. மேலும் சோடியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
இளநீர் உடல் எடையை குறைக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை.
இதில், மெக்சீனியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க இளநீர் உதவாது.

இளநீர் மரத்திலிருந்து கிடைக்கும் பானம். இதனால் சிலசமயம் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
இயற்கையாகவே குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள், இளநீரை குடிப்பதால் காய்ச்சல் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு.
இளநீரை வெட்டியவுடன் பருக வேண்டும். தாமதமாக பருகினால் இளநீர் உள்ள சத்துக்களின் வலிமை குறைந்துவிடும்.