எந்த வகையான கோபம் நம்மை எந்த நிலைக்கு கொண்டு செல்லும்?.!! - Seithipunal
Seithipunal


பொதுவாக இன்றுள்ள காலநிலையில் நமது மனமானது பல விதமான சூழ்நிலையில், பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகிறது. இதனால் நமக்கு சில சூழ்நிலையில் பணியாற்ற இயலாத அளவிற்கு நமது மனமானது கோபமடையும். அந்த வகையில், கோபங்களில் எதனை வகை உள்ளது என்பது குறித்து இனி காண்போம். 

வெளிப்படையான கோபம்:

வெளிப்படையான கோபம் என்பது கோபம் தூண்டப்படும் போது, அதனால் வெளிப்படும் அளவில்லாத கோபத்தால் நாம் நல்லது? எது கெட்டது? என்று தெரியாமல் செயல்படுவது வெளிப்படையான கோபமாகும்.

மூடி மறைக்கப்பட்ட கோபம்: 

மூடி மறைக்கப்பட்ட கோபம் என்பது நமக்கு ஏற்படும் கோபத்தை மனதிற்குள்ளேயே இருக்கும் போது, அது கோபமாக மாறும் சமயத்திலும் வெளிக்காட்டாமல் இருப்பது ஆகும். 

வாய்மொழி கோபம்: 

வாய்மொழி கோபம் என்பது, பொதுவாக நமக்கு கோபம் வரும்போது பிறரை விமர்சனம் செய்வது அல்லது அவமதிப்பது, திட்டுவது போன்ற முறையில் கோபத்தை வெளிப்படுத்துவதாகும். 

அரசீற்றம்: 

அறசீற்றம்  என்பது நமது சமூகத்தில் நடக்கும் கொடுமையை கண்டு, ஆவேசத்துடன் நல்ல மாற்றங்களை கொண்டு வருவதற்கு, மக்கள் சக்தியை ஒன்றாக திரட்டுவதே அறசீற்றம் என்று அழைக்கப்படுகிறது. 

தங்களை தாங்களே துன்புறுத்துதல்:  

தங்களை தாங்களே துன்புறுத்தல் என்பது, பொதுவாக நமக்கு கோபம் அதிக அளவில் ஏற்படும் போது தன்னைத்தானே அடித்து கொள்வது, தனது சட்டையை கிழித்துக் கொள்வது மற்றும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது போன்ற செயல்களை செய்வது தங்களைத் தாங்களே துன்புறுத்துதல் ஆகும்.  

தோன்றி மறையும் கோபம்:  

தோன்றி மறையும் கோபம் என்பது, கோபம் நமக்கு ஏன் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது? எப்போது ஏற்படுகிறது? என்பது தெரியாது. அவ்வாறு ஏற்படும் கோபம் வருவதும், பின்னர் சிறிது நேரத்தில் சரியாகிவிடும். 

எப்போதும் நீங்காத கோபம்: 

எப்போதும் நீங்காத கோபம் என்பது, சிரித்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென வரும் கோபத்தால் திடீரென்று கோபம் அடைவதாகும். 

மற்றவரை இழிவுபடுத்தும் கோபம்: 

மற்றவை இழிவுபடுத்தும் கோபம் என்பது, நாம் சில நேரங்களில் பிறரை மட்டம் தட்டி கொண்டு இருப்பது, அவரின் குறையைக் கண்டுபிடித்து கூறுவது மற்றும் தன்னைத் தவிர பிறர் அனைவரும் வேலைக்கு லாயக்கற்றவர்கள் என்று இருப்பது மற்றவர்களை இழிவுபடுத்தும் கோபமாகும். 

பீறிட்டு எழும் கோபம்:  

பீறிட்டு எழும் கோபம் என்பது., திடீரென ஆவேசத்துடன் கூச்சலிடுவது மற்றும் கைகள் நடுங்குவது என்பதாகும். இதனால் தன்னிலை இழந்து செயல்படுவது பீறிட்டு எழும் கோபமாகும். 

எதிர்வினை கோபம்: 

எதிர்வினை கோபம் என்பது பிறர் கோபப்படும் சமயத்தில், அவருக்கு எதிர்ப்புறம் நின்று நாம் கோபப்படுவது மற்றும் பொறாமையால் கோபமடைவது, இருவரின் வாழ்க்கை பொறுக்க முடியாத தன்மையால் இந்த கோபமானது ஏற்படுகிறது. 

கையாலாகாத கோபம்: 

கையாலாகத கோபம் என்பது, நாம் நினைக்கும் காரியங்கள் நிறைவேறாத நேரத்தில் கோபம் வரும். அந்த கோபமே நமக்கு விரும்பியபடி நடக்காதவர்கள் மீது காட்டுவது வழக்கம் என்பதால் இதனை கையாலாகாத கோபம் என்று அழைக்கின்றனர். 

English Summary

which type of angry how to change your mind


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal