பாராம்பரிய அரிசி வகைகளும்.. அதன் சிறப்பு பயன்களும்.! - Seithipunal
Seithipunal


தமிழர்களின் உணவுப் பழக்கங்களில் முக்கியமான ஒன்று  அரிசியாகும். இந்த அரிசி  ஏராளமான நார்ச்சத்துக்கள் மற்றும்   கார்போஹைட்ரேட்டுகளை  கொண்டிருக்கிறது. பொதுவாக நாம் பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாஸ்மதி, சீரக சம்பா என கேள்விப்பட்டிருப்போம். இவை தவிர என்னென்ன அரிசிகள் இருக்கின்றன அவற்றில் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

மாப்பிள்ளை சம்பா:

தமிழர்களின்  பாரம்பரியமான  அரிசி வகையாகும். இதில் விட்டமின்கள்,புரதச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.  இந்த அரிசியில் இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இது நம் ரத்தத்தின் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு  உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அளிக்க பயன்படுகிறது .

கருப்பு கவுனி அரிசி:

இந்த அரிசியில் அதிக அளவிலான ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும்  நார் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன..  இந்த அரிசியானது ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்கிறது . கல்லீரலின் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது.  ரத்த ஓட்டத்தை சீராக்கி  இதயச் சுவர்களில்  கொழுப்பு படிவதை தடுக்கிறது .

பூங்கார் கைக்குத்தல் அரிசி:

இந்தியாவின் மிக முக்கியமான  பாரம்பரியமிக்க அரிசி வகைகளில்  இதுவும் ஒன்று.  இதில் இருக்கக்கூடிய 
அந்தோ சயினின் காரணமாக  இவை வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியின் சிறப்பு என்னவென்றால்  இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் . கொழுப்பினை கரைப்பதற்கும்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும்  இந்த அரிசியில் ஏராளமான தாதுக்கள் உள்ளன.

காட்டு  யானம்  அரிசி:

இது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய  ஒரு பாரம்பரியமிக்க அரிசி வகை.இது மானாவாரி பயிராகும். அதிக அளவு கால்சியம் சத்துக்களை கொண்டுள்ள இந்த அரிசி நமது உடலின் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.  இது  சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு  அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது .

கிச்சிலி சம்பா :

இந்திய அரிசி ஆராய்ச்சி கழகம்  இந்த அரிசியின் மரபணுவை கொண்டு தான் அரிசி  தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு புதிய அரிசி வகைகளை  கொண்டு வருகிறது. இது பிரியாணி மற்றும் இனிப்பு வகைகள் செய்வதற்கு ஏற்ற அரிசி ஆகும். இந்த அரிசி எளிதில் செரிமானமாக கூடியது . மேலும் இது தசைகளை வலுவாக்கும் .  நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

குடவாழை:

இது பாரம்பரிய நெல் வகைகளைச் சார்ந்த அரிசி ஆகும் .  இன்னும் வேதாரண்யம் பகுதிகளில்  பாரம்பரிய முறைப்படி பயிரிடப்பட்டு வருகிறது. இந்த அரிசியானது  குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி  குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது . ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. வயிற்று வலி, வயிறு உப்புசம், அசிடிட்டி போன்ற வயிறு சம்பந்தமான நோய்களை தீர்க்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Types of rice and its benefits


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->