தொப்பையை குறைக்க.. இதையெல்லாம் குடிச்சா போதும்.! - Seithipunal
Seithipunal


நம் வயிற்றுப் பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை குறைப்பது என்பது  அழகுக்கான ஒரு பிரச்சனை மட்டுமல்ல. அது ஆரோக்கியத்திற்குமான ஒரு விஷயமாகும். உடலிலே கொழுப்பு தேங்கும் பகுதிகள் ஆபத்தானது.  

இதனால், அதில் இருக்கும் கொழுப்பை கரைப்பது அத்தியாவசியமாகிறது. உண்மையிலேயே இந்த கொழுப்பானது. 

உங்கள் இடுப்பை சுற்றி இருக்கின்ற  கூடுதல்  திணிப்பை அகற்ற நினைக்கின்றீர்கள் என்றால் கீழ் உள்ள உணவை பயன்படுத்துவதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

சில இயற்கை பானங்களை  நாம் குடிப்பதன் மூலமாக  நமது, உடலில் தேங்கி இருக்கின்ற அதிகப்படியான கொழுப்பை குறைத்து நாம் தொப்பை வராமல் தடுக்கலாம் .

ஆப்பிள் சிடார் வினிகரில்  எலுமிச்சம் பழச்சாறை கலந்து குடிப்பதன் மூலம், நம் உடலில் தங்கி இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து தொப்பை விழுவதை தடுக்கிறது. 

இவற்றில் இருக்கின்ற அமிலங்களானது  வயிற்றுப் பகுதியை சுற்றி இருக்கின்ற கொழுப்பை கரைப்பதன் மூலமாக நம் உடல் எடை குறைய உதவுகின்றன.

பட்டையுடன் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் வயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்க  பயன்படுத்தலாம். 

இரண்டு டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன்  ஒரு கரண்டி தேன் சேர்த்து மிதமான சூடுள்ள நீரில் கலக்க குடிப்பதன் மூலம் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு குறைந்து  வயிறு தட்டையாக உதவும் .

க்ரீன் டீயுடன்  எலுமிச்சை மற்றும்  புதினா இலைகளை கலந்து குடிப்பதன் மூலம்  நம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இது ஒரு ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகள் நிறைந்த பானமாகும் .

காபியில் டார்க் சாக்லேட் கலந்து பருகுவதன் மூலம், நாம் தொப்பை வராமல் தடுக்கலாம். காசியில் இருக்கக்கூடிய கஃபைனானது. நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய கொழுப்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. 

மேலும், டார்க் சாக்லேட்டில் இருக்கும்  ஆக்சிஜனேற்றக் கூறுகள் உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க உதவுகின்றன.

அன்னாசிப்பழம் உடலில் தங்கி இருக்கும் கொழுப்பை கரைக்க மற்றும் ஒரு முக்கியமான காரணியாகும். இதனை பட்டையுடன் கலந்து குடிக்கும் போது  நம் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது  அதனால் இது கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stomach calories burning Tea


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->