உஷார் மக்களே...! வெறிநாய்க்கடி தடுப்பு பாதுகாப்பு கேள்விக்குறி...! இந்தியாவில் ‘அபய்ராப்’ போலி தடுப்பூசி பரவல் - ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோயைத் தடுப்பதற்காக ‘அபய்ராப்’ (Abhayrab) என்ற தடுப்பூசி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி, ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘அபய்ராப்’ தடுப்பூசியின் போலி தொகுப்புகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத்துறை அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, 2023 நவம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு, வெறிநாய்க்கடி நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் ‘அபய்ராப்’ தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற மாற்று வெறிநாய்க்கடி தடுப்பூசியை மீண்டும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், 2023 நவம்பர் 1 முதல் இந்தியாவில் ‘அபய்ராப்’ தடுப்பூசியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்களைப் பெற்ற அனைவரும், உடனடியாக தங்களது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த எச்சரிக்கை, பொதுச் சுகாதாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி, தடுப்பூசி பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rabies prevention and safety risk Spread counterfeit Abhayrab vaccine India Australian government warning


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->