தும்மல் சொல்லும் சகுனம்.. சுப சகுனமா.. அசுப சகுனமா.. தும்மலை அபசகுனமாக கருதுவது ஏன்? - Seithipunal
Seithipunal



தும்மலை அபசகுனமாக கருதுவது ஏன்?

சகுனங்கள் பலவகையாக இருந்தாலும் அதை நம்புபவர்கள் பலர், நம்பாதவர்கள் சிலர் இருக்க தான் செய்கிறார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் இருக்கும் நல்லனவற்றை மட்டும் எடுத்து கொள்வது நல்லது என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருப்போம்.

மேலும், தும்மலிலும் சகுனம் உள்ளது என்கிறது சாஸ்திரம். அந்த காலம் முதல் இந்த காலம் வரை தும்மும்போது சகுனம் பார்த்து கூறுகிறோம். தும்மினால் யாரோ நினைக்கிறார்கள் என்று நம்புகிறோம். புரை ஏறினாலும் இதே பலன் கூறுகிறோம். தும்மலை அபசகுனமாக கருதுவது ஏன்? என்பதை பற்றி இங்கு காண்போம்.

திருமணம் போன்ற வைபவங்களில் தும்மினால் நல்லதா?

திருமணம் போன்ற வைபவங்களில் மேள சத்தமும், நாதஸ்வர சத்தமும் அதிக ஒலியுடன் ஒலிப்பதற்கும், தும்மலுக்கும் கூட சம்பந்தம் உள்ளது.

சுப காரியங்கள் அல்லது வெளியில் செல்லும்போது, தும்மினால் அது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். ஏனெனில் தும்மினால் அவருக்கு உடம்பு சுகமில்லை என்று அர்த்தம். அதனால் தும்மியவருக்கு, உடம்பு சுகமில்லாததால் வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறுவார்கள்.

உடல் ஆரோக்கியத்தை தருபவர், நம்பிக்கை துரோகம் செய்பவர்களிடம் இருந்து காப்பவர். சொல்லால் காயப்படுத்தியவர்களையும், அவச்சொல் கூறி காயப்படுத்தியவர்களையும், வீடு வாசல் சொத்துக்களை ஏமாற்றி அபகரித்தவர்களையும் பைரவர் அழித்தொழிப்பார் என்பது ஐதீகம்.

தோல்வி, அவமானத்திலிருந்து உங்களை காத்தருளுபவர் பைரவர். பொன் பொருள் இழந்தவர்கள், காசு பணத்தை இழந்து கலங்குபவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பைரவரை வணங்கி பலன் பெறுங்கள்!

தும்மலை அபசகுனமாக நோக்குவதால் நல்ல காரியம் நடக்கும் இடங்களில் அதிக ஒலியுடன் சத்தம் எழுப்பப்படுகிறது. இந்த சத்தத்தில் நாம் தும்மினாலும் வெளியே கேட்காது. இதற்காவே அந்த காலங்களில் எல்லாம் திருமணம் போன்ற வைபவங்களில் மைக் செட் வைத்தார்கள்.

தும்மினால் ஏற்படும் பலன்கள் : 

சளி, கபம் பிடித்து தொடர்ச்சியாக தும்மினால் அதற்கு பலன் எல்லாம் ஒன்றும் கிடையாது. அது இயற்கையாக நடக்கும் ஒன்று.

அப்படி இல்லாமல் திடீரென தும்முவதற்கு தான் பலன் கூறப்படுகிறது. இப்படி திடீரென தும்மும்போது ஒரு முறை தும்மினால் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்றும், இரண்டு முறை தும்பினால் நல்லது நடக்கப் போகிறது என்றும் அர்த்தம்.

பெண்கள் தங்கள் மனதில் ஒரு விஷயத்தை நினைத்து இருக்கும்போது ஆண் தும்மினால் நல்ல சகுனம் என்று அர்த்தம்.

அதே போல் தான் ஒரு ஆண் தன் மனதில் எந்த விஷயத்தையாவது நினைத்து கொண்டிருக்கும்போது அந்த சமயத்தில் சரியாக ஒரு பெண் தும்மினால் நல்லது தான் நடக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meaning of sneezing


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->