உடலுக்கு நன்மை தரும்  முலாம்பழம்! - Seithipunal
Seithipunal


குளிர்கால  முலாம் பழம் என்பது வெள்ளை பூசணிக்காய் தான். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இதில் கார்போஹைட்ரேட்கள், நார்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, பி1 (தியாமின்), பி3 (நியாசின்), பி5 (பாந்தோத்தேனிக் அமிலம்), மற்றும் பி6 (பைரிடாக்சின்) மற்றும் தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம்,கால்சியம், பொட்டாசியம் மற்றும் கரோட்டினாய்டுகள்  நிறைந்திருக்கின்றன.

இதில் இருக்கக்கூடிய அதிகமான நீர்ச்சத்து  கோடை மற்றும் வெப்பமான காலங்களில்  நம் உடலை அதிக நீரேற்றுடன் வைப்பதற்கு உதவுகிறது. மேலும் இது உடலை குளிர்வித்து  அதிக வெப்ப நிலையில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

முலாம்பழம்  நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை  மேம்படுத்துகிறது. இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும்  வைட்டமின் சி  உடலின் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை தூண்டி நோய் எதிர்ப்பு ஆற்றலை  அதிகப்படுத்துகிறது. இவற்றில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன குடல் ஆரோக்கியமானது நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் நேரடியாக தொடர்புடையது.

இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவை பார்வையை மேம்படுத்தவும் கண் புரை வராமல் தடுக்கவும் உதவுகின்றன. வைட்டமின்கள் அதிகமாக உள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம்  கண்களில் புரை விழும் வாய்ப்பு 40% குறைக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

முலாம்பலங்களில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது நம் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நலனை காய்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய அடினோசின் என்ற கலவை இருதய அமைப்பில் ரத்தம் உறைவதை தடுக்கிறது.

முலாம்பழத்தில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ  நம் தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்  சருமத்தின் வளர்ச்சியை தூண்டும் . முலாம்பழத்தை நேரடியாக உச்சந்தலையில் தேய்க்கும் போது முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நீண்ட பளபளப்பான கூந்தலை பெறவும் இது உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of musk melon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->