கொய்யா இலையில் இவ்வளவு நன்மைகளா?  - Seithipunal
Seithipunal


கொய்யா இலை பல வகையான நோய்களை தீர்க்கிறது. கொய்யா இலையில்அந்த வகையில் இதில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்கள் உள்ளது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும், செரிமான சக்தியை மேம்படுத்தி குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மலச்சிக்கல், அஜீரணம் பிரச்சனையும் குணமாகிறது.

* கொய்யா இலையில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடி உடலில் நோய் கிருமிகள் உருவாகுவதை  தடுக்கிறது. இலையை தேநீராக குடிக்கும் போது இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து நம் தோலில் பளபளப்பையும் தோலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும் குணப்படுத்துகிறது.

* மேலும் சரும வறட்சி, இளமையில் முதுமை தோற்றம், சருமத்தில் அரிப்பு, புண்கள், பருக்கள், தழும்புகள் உள்ளிட்டவற்றையும் சரி செய்கிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. 

* நெஞ்சு வலி, தமனிகளில் அடைப்பு, இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுதல், வாத நோய் போன்றவற்றை ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. தினமும் ஒரு கொய்யா இலையை மென்று தின்னால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதோடு உடலில் ஏற்படும் காயங்கள் உள்ளிட்டவையும் குணமாகும்.

----------------------------------------------------------------------------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guava leaf benefit


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->