தேனின் தித்திப்பான நன்மைகள்.. உடல் நலத்திற்கு மட்டுமல்ல.. உள்ளத்தின் நலத்திற்கும்..!! - Seithipunal
Seithipunal


நமது தமிழ் வைத்தியம் முதல் சீனா., ரஷியா., அமெரிக்கா., ஆப்ரிக்கா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் தேனிற்கு மருத்துவ முக்கியத்துவமானது உள்ளது. நாட்டு மருந்துகளோடு தேன் துணை மருந்தாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வயிற்றில் புண்களை உருவாக்காதவாறு., தேவையான சத்துக்களை இரத்தத்தில் கலக்கும் தன்மையை வழங்குகிறது.

தமிழருடைய சித்த மருத்துவ முறைகளில் ஆஸ்துமா., அலர்ஜி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு 1 தே.கரண்டி அளவுடைய தேனுடன் இரண்டு குறு மிளகை நன்றாக அரைத்து சேர்த்து உணவுக்கு முன்னதாக உட்கொண்டு வர வேண்டும். குரல் கரகரத்து இருந்தால் தேனுடன் துளசி சாறு மற்றும் வெற்றிலை சாறை சேர்த்து தினமும் மூன்று முறை உட்கொண்டு வர வேண்டும். 

honey, honey images,

உடலில் தீக்காயம் மற்றும் தோல் புண்கள் இருந்தால் தேன் கிருமி நாசினியாக செய்யப்படும். இரைப்பையில் ஏற்படும் புண்களுக்கு துணை மருந்தாகவும்., நேரடி சிகிச்சையை அளிக்கும் மருந்தாகவும் இருக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி வில்வப்பொடி 1 தே.கரண்டி எடுத்து கொண்டு தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இரத்த சோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் மூன்று வேலை உணவுக்கு முன்னதாக இளம் சூடுள்ள நீரில் தே.கரண்டி அளவிற்கு தேன் கலந்து உண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும். இதனால் உடல் மற்றும் மனதில் ஏற்பட்டுள்ள சோர்வை போக்கி இதயம் பலமாகவும்., இரத்த ஓட்டம் சீராகவும் உதவி செய்யும். உடலில் உள்ள கொழுப்புகள் குறைய இளம் சூடுள்ள நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

good things for honey


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->