கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து...! உயிர் சேதம் எவ்வளவு தெரியுமா?
Bus overturns after losing control Kenya Do you know how many lives were lost
கென்யாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழப்பு.அதன் பின்னணி இதோ;
ஆப்பிரிக்கா கென்யாவின் நியாஹெரா நகரிலிருந்து நியாகாச்சிற்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்தனர்.அவர்கள் அனைவருமே தங்களின் உறவினரின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள்.

அந்த பேருந்து ககமேகா நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த திடீர் விபத்தில் மொத்தமாக 25 பேர் உயிரிழந்தனர்.மேலும், இந்த விபத்தில் பெண்கள் மட்டுமே 10 பலியாகினர்.இதில் படுகாயமடைந்த 20 பேர் விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த விபத்தில் பலியானோருக்கு அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ இரங்கல் தெரிவித்தார்.
English Summary
Bus overturns after losing control Kenya Do you know how many lives were lost