உலக சிங்க தினம்!.
உலக சிங்கம் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. சிங்கம் என்றாலே அதற்கு தனி மரியாதை உண்டு. பண்டைய கால அரசர்கள் காலத்திலேயே சிம்மம் என்றால் தலைவன் என்றே அர்த்தம். அரசர்கள் அமரும் இடத்துக்கு சிம்மாசனம் என்றும், எதிரிகளுக்கு பயத்து ஏற்படுத்தும்போது, அவன் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்று சிங்கத்தையே நமது மக்கள் அடையாளப்படுத்தி உள்ளனர்.
இந்த தினம், காட்டு ராஜா என அழைக்கப்படும் சிங்கங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.வி.வி.கிரி அவர்கள் பிறந்ததினம்!.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி 1894ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஒடிசாவில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தார்.
1914-ல் காந்தியை சந்தித்த பிறகு, சட்டம் பயில்வதை விட, விடுதலைப் போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பதுதான் முக்கியம் என்று நினைத்தார்.
1936-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற இவர், மதராஸ் மாகாணத்தின் தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு இலங்கைக்கான இந்தியத் தூதர், மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர், பல மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அதன்பின் குடியரசுத் துணைத் தலைவர் (1967), குடியரசுத் தலைவர் (1969 இடைக்காலப் பதவி), அதன்பிறகு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்று 1974 வரை அப்பதவியில் இருந்தார்.
இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமிட்ட இவர் தனது 86-வது வயதில் 1980 ஜூன் 24 ஆம் தேதி அன்று மறைந்தார்.