அதிர்ச்சி! 334 அரசியல் கட்சிகள்...நிபந்தனைக்கு உட்பட்டு திடீர் நீக்கம்...!-தேர்தல் ஆணையம் - Seithipunal
Seithipunal


அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட வேண்டும். அதுதான் விதிமுறை.அப்போதுதான் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இடம் பெற முடியும்.

இதில் கூடுதலாக இன்னொறு விதிமுறை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்டு முதல் 6 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட வேண்டும். அந்த நிபந்தனைகளை கடைபிடிக்காத கட்சிகள் அந்த பட்டியலிலிருந்து அறவே நீக்கப்படும்.அதன்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தலில் நின்று குறிப்பிட்ட சதவீத வாக்கு சதவீதத்தையோ, குறிப்பிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரையோ பெற்றால் அந்த கட்சிக்கு அங்கீகாரம் மற்றும் நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும்.

அவ்வகையில்,இந்தியாவில் 2,854 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருந்தன. இதில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாமல் உள்ள 334 அரசியல் கட்சிகள் சில, தேர்தல் கமிஷனின் நிபந்தனையான, பதிவு செய்யப்பட்ட 6 ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் நிற்கவில்லை என பதிவு தெரிவிக்கிறது.

ஆகையால்,அந்த 334 அரசியல் கட்சிகளையும், தேர்தல் கமிஷனின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தற்போது எடுத்துள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவை.

இந்நிலையில் குறிப்பாக , 6 அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளும், 67 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளும், பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாமல் 2,520 அரசியல் கட்சிகளும் இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock 334 political parties suddenly removed with conditions Election Commission


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->