ஈ.பி.எஸ். முதல்வராகும் வரை நமக்கு தூக்கமில்லை..மாவட்ட செயலாளர் பேச்சு!
We wont have peace until E P S becomes the Chief Minister District Secretary s statement
2026 இல் ஈ.பி.எஸ்.முதல்வராகும் வரை நிர்வாகிகள் தூக்கத்தை மறந்து கடுமையாக உழைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம். சுகுமார் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை சேர்க்க பல முயற்சிகளை திரை மறைவில் திரைக்குப் பின்னாலும் எடுத்து வருகின்றனர் .குறுகிய காலநிலை உள்ளதால் தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு களை கட்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது .
200 தொகுதியை வெற்றி பெறுவோம் என்று திமுக தனது பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர் .இதை போல் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியில் அமரவும் இந்த முடிவோடு எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் பிரச்சாரத்தை தீவு படுத்து உள்ளார். அந்த வகையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் இந்த சுற்றுப்பயணத்தை அவர் சமீபத்தில் தொடங்கி தினமும் மூன்று தொகுதி வாரியாக சூறாவளி சுற்று பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 19 தேதி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்திற்கு வருகை திரை உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதற்காக ராணிப்பேடை மாவட்டம் வாலாஜாவில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது ,இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் எம் குமார் கலந்து கொண்டு தொண்டர்களுக்கும் நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது கூட்டத்தில் பேசிய சுகுமார் 2026 இபிஎஸ் முதலா முதல்வராகும் வரை நிர்வாகிகள் தூக்கத்தை மறந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
We wont have peace until E P S becomes the Chief Minister District Secretary s statement